புதுச்சேரியில் மதுக்கடை ஷட்டரை உடைத்து ரூபாய் 2 லட்சம் திருடிய தஞ்சாவூரை சேர்ந்த பிரபல திருடன் கைது..
புதுச்சேரியில் கடந்த 5ம் தேதி பாரதி வீதியில் உள்ள மது கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே இருந்த ரூ.2 லட்சம் பணத்தை மர்ம நபர் திருடி சென்றார். இது தொடர்பாக மது கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து மதுக்கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் தஞ்சாவூரை சேர்ந்த பிரபல திருடன் மனோகர்(62) என்பது தெரிய வந்தது.இதனையடுத்து தலைமறைவாக இருந்த மனோகரனை தனிப்படை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ரூ.1.30 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர் மீது புதுச்சேரியில் பல்வேறு காவல் நிலையங்களில் 5 திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments